புனித இலாசரை நோக்கி ஜெபம்
- தூய இலாசரே,
துன்பமுற்றோரின் நட்பான தோழனே,
நான் இப்போது உங்கள் வல்லமைமிக்க துணையைக் கோருகிறேன்.
நலமடைய உங்களின் மதிப்புமிக்க வேண்டுகோளை வேண்டுகிறேன்.
(இங்கே உங்கள் நோயையோ அல்லது துன்பத்தையோ குறிப்பிடுங்கள்...)
இந்த சோதனையை, நம்பிக்கையுடனும்,
இறைவனுடைய திருச்சித்தத்தின் மேல் முழுமையான ஒப்புதலுடனும்
தாங்கும் அருளை எனக்குத் தாரும்.
பரலோக வைத்தியரான இயேசு கிறிஸ்து,
என்னை நலமடையச் செய்து,
எனது உடல் நலத்தையும் மன அமைதியையும் மீட்டுத் தரும் படியாக
உங்கள் வழியாக இறைவனை வேண்டுகிறேன்.
அத்துடன், உலகெங்கும்
நோய்களாலும் துன்பங்களாலும் பாதிக்கப்படுகின்ற
எல்லோருக்கும், ஆறுதலும் அமைதியும் கிடைக்க
வேண்டுகின்றேன்.
ஆமென்.
INFORMATION ABOUT US